“எங்க அண்ணன் தான் பொதுச்செயலாளர் ஆகணும்” எடப்பாடிக்கு எதிராக வெடித்த அடுத்த புயல்…அதிமுக பொதுச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி வரத் தொண்டர் தீமிதிப்பு — கோவையில் பரபரப்பு…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க அண்ணன் தான் பொதுச்செயலாளர் ஆகணும்” எடப்பாடிக்கு எதிராக வெடித்த அடுத்த புயல்…அதிமுக பொதுச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி வரத் தொண்டர் தீமிதிப்பு — கோவையில் பரபரப்பு…!

Published

on

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற விருப்பத்துடன், கோவையைச் சேர்ந்த கட்சித் தொண்டர் செந்தில்குமார் என்பவர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். தலைமை மீதான அதிருப்தி மற்றும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் வேலுமணியின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகத் தங்கள் விருப்பத்தை இதுபோன்று வெளிப்படுத்தி வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, தலைமை வழங்கிய கட்சிப் பொறுப்பை ஏற்க எஸ்.பி.வேலுமணி மறுத்து வருகிறார். தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை எனக் கூறி ஒரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in