வேளாண் பட்ஜெட் அதிரடி: காட்டுப்பன்றி தொல்லைக்கு எண்ட் கார்டு… பயிர் இழப்பைத் தடுக்க ₹7.35 கோடியும், தார்ப்பாய்களுக்கு ₹10 கோடியும் ஒதுக்கீடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேளாண் பட்ஜெட் அதிரடி: காட்டுப்பன்றி தொல்லைக்கு எண்ட் கார்டு… பயிர் இழப்பைத் தடுக்க ₹7.35 கோடியும், தார்ப்பாய்களுக்கு ₹10 கோடியும் ஒதுக்கீடு..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில் ‘காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு’ ₹7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்துடன் இயற்கை சீற்றங்கள் மற்றும் பருவமழை காலங்களில் அறுவடை செய்யப்படும் விளைபொருட்கள் வீணாவதைத் தடுப்பதற்கான முக்கிய அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்களது நெல் உள்ளிட்ட விளைபொருட்களைப் பாதுகாப்பாக மூடி வைப்பதற்காக 43,500 தரமான தார்ப்பாய்கள் வாங்குவதற்கு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டங்கள் மூலமாகப் பயிர்ச் சேதங்கள் பெருமளவில் குறைக்கப்படும் என விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in