LATEST NEWS
BREAKING: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! இனி காய்கறி வாங்க காசு செலவழிக்க வேண்டாம்… பெண்களுக்கு பட்ஜெட்ல செம அறிவிப்பு..!”
தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அனைத்தும் வீட்டிலே, ஆரோக்கியம் கையிலே’ என்ற சிறப்பான முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்காக ஆரம்பக் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் அமைத்து ஆரோக்கியமான காய்கறிகளை விளைவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்காக அவர்களுக்குத் தேவையான மாடித் தோட்டம் அமைக்கும் இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள் மற்றும் பழச்செடி தொகுப்புகள் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளன.
