LATEST NEWS
நள்ளிரவு 3 மணி… எவ்வளவோ கெஞ்சியும் விடல… 3 மாதப் பச்சை குழந்தைனு கூட பார்க்காம… நடுரோட்டில் காரைப் பறிமுதல் செய்து தவிக்கவிட்ட போலிஸ்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் பாரான் பகுதியில் நள்ளிரவில் காவல்துறையினர் நடத்திய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணீஷ் சும்மன் என்பவர், தனது மனைவி மற்றும் 3 மாதக் குழந்தையுடன் தேவி கோவிலுக்குச் செல்வதற்காக அதிகாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அவர்களை வழியில் மறித்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய கார் என்பதால் அதன் ஆவணங்கள் வீட்டில் தவறி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், நிலைமையை உணராமல் காவல்துறையினர் அவர்கள் மீது திருட்டுப் பழியைச் சுமத்தி, காரைப் பறிமுதல் செய்தனர். 3 மாதப் பச்சை இளம் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு தவித்த மணீஷ், “காரை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்த நள்ளிரவு நேரத்தில் எங்களை வீட்டிலாவது கொண்டு போய் விட்டுவிடுங்கள்” என்று கண்ணீருடன் கெஞ்சியுள்ளார்.
ஆனால், சிறிதும் இரக்கமின்றி கணவன், மனைவி மற்றும் 3 மாதக் குழந்தையை ஆள்நடமாட்டமில்லாத வெறிச்சோடிய சாலையில் அப்படியே தவிக்கவிட்டு காவல்துறையினர் காரை எடுத்துச் சென்றனர். இந்த அநீதியைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, காவல்துறையினர் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினரின் இந்த மனிதநேயமற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
