LATEST NEWS
“அடப்பாவி.. 15 லட்ச காரை வச்சிருக்காரு… ஆனா புத்தி இப்படி இருக்கே..” ரூ.65 சேமிக்கப் போய் ரூ.6500-ஐ இழந்த வாலிபர்.. நெட்டிசன்கள் மரண கலாய்..!!
உத்திரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் உள்ள டோல் பிளாசா ஒன்றில், 65 ரூபாய் டோல் கட்டணத்தைச் சேமிப்பதற்காக வாலிபர் ஒருவர் தனது ஸ்கார்பியோகாரை அதிவேகமாக இயக்கி, டோல் கேட்கேட்டை உடைத்துக்கொண்டு தப்பியோடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ‘கூல்’ ஆசையில், அந்த வாலிபர் இந்த விபரீதச் செயலைத் தானே வீடியோவாகப் பதிவு செய்து பெருமையுடன் இணையத்தில் பதிவிட்டுள்ளார். 15 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டிக்கொண்டு வெறும் 100 ரூபாய்க்கும் குறைவான டோல் கட்டணத்தை செலுத்த மனமில்லாமல் வாலிபர் செய்த இந்த அநாகரிகச் செயல் இணையவாசிகளைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபரீத வீடியோ இணையத்தில் வைரலாகிப் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியதைத் தொடர்ந்து, பிரோசாபாத் காவல்துறை இந்தச் சம்பவத்தை அதிகாரப்பூர்வமாகக் கையில் எடுத்துள்ளது. டோல் பிளாசா பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றத்திற்காகவும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடுமையான சட்டப்பூர்வமான மற்றும் விதிகளின்படியான நடவடிக்கைகள் எடுக்கப் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளருக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். 65 ரூபாய் டோல் கட்டணத்தைத் தவிர்க்க ஆசைப்பட்டு, தனது காரின் முன்பக்கக் கண்ணாடியை சுமார் 6500 ரூபாய் செலவில் உடைத்துக்கொண்ட அந்த வாலிபரின் விசித்திர புத்தியை நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்டுகள் மூலம் பயங்கரமாகக் கலாய்த்து வருகின்றனர்.
