LATEST NEWS
“மதுவிலக்கு மாநிலத்தில் நடந்த கூத்து!..” தண்ணீருக்குள் விழுந்த கார்… போட்டிப் போட்டு ‘சரக்கை’ அள்ளிய கூட்டம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தின் மோஹானியா பகுதியில், மதுப் பாட்டில்களுடன் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தண்ணீருக்குள் விழுந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த பாட்டில்களைக் கொள்ளையடிப்பதற்காக கிராம மக்கள் அலைமோதிய விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. காரில் கொண்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான மதுப் பாட்டில்கள் தண்ணீரில் மிதக்கத் தொடங்கியதும், அந்த இடத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள் உடனடியாகத் தண்ணீருக்குள் குதித்து பாட்டில்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளத் தொடங்கினர். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள சூழலில், இந்த நூதன கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரில் மிதந்த மதுப் பாட்டில்களைக் கிராம மக்கள் தங்களின் கைகளிலும், பைகளிலும் அள்ளிச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விபத்து மற்றும் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்ணீரில் மூழ்கிய காரை மீட்பதோடு, மதுவிலக்கு சட்டத்தை மீறி மதுப் பாட்டில்களைக் கடத்தி வந்த நபர்கள் மற்றும் அதனைத் திருடிச் சென்ற கிராம மக்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
