“ஒரே ஒரு பிராங்க்… அம்புட்டுதான்..!” இனி ஆயுசுக்கும் அந்தப் பொண்ணு ஜங்க் ஃபுட் பக்கம் போகாது… மகளை மிரள வைத்த தாயின் ‘கில்லாடி’ ஐடியா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரே ஒரு பிராங்க்… அம்புட்டுதான்..!” இனி ஆயுசுக்கும் அந்தப் பொண்ணு ஜங்க் ஃபுட் பக்கம் போகாது… மகளை மிரள வைத்த தாயின் ‘கில்லாடி’ ஐடியா..!!

Published

on

இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு வெளி உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தைத் தடுத்து, அவர்களை வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட வைப்பது பெற்றோருக்குப் பெரும் சவாலாக உள்ளது. சிப்ஸ், சாக்லேட், பர்கர், பீட்சா போன்றவற்றை குழந்தைகள் அதிகம் விரும்புவதால், வீட்டின் உணவு அவர்களுக்குப் பிடிப்பதில்லை. இந்நிலையில், தன் மகளின் வெளி உணவு உண்ணும் பழக்கத்தை விடுவிப்பதற்காக தாய் ஒருவர் செய்த ஒரு வித்தியாசமான ‘ப்ராங்க்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், ஒரு சிறுமி கட்டிலில் அமைதியாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். முதல் பார்வையில் அவளுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுவது போலத் தெரிகிறது. அவளுக்கு எதிரே இருக்கும் திரையில், வயிற்றுக்குள் ஒரு பயங்கரமான பூச்சி இருப்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே இது உண்மையான மருத்துவ பரிசோதனை அல்ல என்பதும், அந்தத் தாய் லேப்டாப்பில் ஒரு போலி அல்ட்ராசவுண்ட் வீடியோவை ஓடவிட்டு, கம்ப்யூட்டர் மவுஸை அல்ட்ராசவுண்ட் மெஷின் போல மகளின் வயிற்றில் நகர்த்தி நாடகமாடியதும் தெரியவருகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/DblPriwhv-Q/?utm_source=ig_web_button_share_sheet

திரையில் தெரியும் பூச்சியைப் பார்த்து, வெளி உணவு சாப்பிட்டதால் தான் தன் வயிற்றில் பூச்சி வந்துவிட்டதோ என்று அந்த சிறுமி மிகவும் தீவிரமான முகபாவனையுடன் பயத்துடன் பார்க்கிறாள். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘diviwonderland’ என்ற கணக்கில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட் பழக்கத்தைத் தவிர்க்க இத்தகைய சுவாரஸ்யமான முறைகள் உதவும் எனச் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்; அதேவேளையில், குழந்தைகளைப் பயமுறுத்தாமல் அன்பாக எடுத்துரைப்பதே நல்லது என்றும் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in