LATEST NEWS
“விருந்தினரே கடவுள்..!” ரஷ்யப் பெண்ணுக்கு இந்திய ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. டாக்ஸியில் நடந்த அழகிய சம்பவம்… இணையத்தில் தீயாய் பரவும் வைரல் கதை..!!
முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய நாட்டவரான பெண் ஒருவர், விமான நிலையத்திலிருந்து விடுதிக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் அவரிடம் உணவு சாப்பிட்டீர்களா என்று விசாரித்துள்ளார். அந்தப் பெண் பசியோடு இருப்பதை அறிந்ததும், வழியிலேயே காரை நிறுத்திய அந்த ஓட்டுநர், தனது சொந்தப் பணத்தில் பீட்சா வாங்கி அப்பெண்ணிற்கு வழங்கியுள்ளார். அதோடு, அவரைப் பத்திரமாக விடுதியிலும் கொண்டு போய் சேர்த்துள்ளார். எதிர்பாராமல் கிடைத்த இந்த அன்பான உதவியால் நெகிழ்ந்துபோன அப்பெண், விடுதியை அடைந்ததும் பீட்சாவிற்கான தொகையுடன் சேர்த்து ரூ.1,000 கூடுதல் தொகையையும் ஓட்டுநருக்கு அன்பளிப்பாக வழங்க முற்பட்டார்.
भारत की पहली यात्रा पर आई एक रूसी महिला एयरपोर्ट से होटल जाते समय कैब ड्राइवर ने उनसे पूछा कि क्या उन्होंने खाना खाया है../
जब उन्हें पता चला कि महिला भूखी है, तो उसने रास्ते में रुककर अपने पैसे से पिज्जा खरीदकर दिया और सुरक्षित होटल तक पहुंचाया../
महिला इस अप्रत्याशित मदद से… pic.twitter.com/DnMIv9DIXH— Durgesh Kannaujiya (@GUpdate1361) August 6, 2026
ஆனால், அந்த ஓட்டுநர் புன்னகையுடனே, “விருந்தினரே கடவுள்” என்று கூறி, அந்த அன்பளிப்புத் தொகையைப் பெற மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான தனது பார்வையை நேர்மறையாக மாற்றியுள்ளதாக அந்தப் பெண் பரவசத்துடன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், ஓட்டுநரின் இந்த நேர்மை, கருணை மற்றும் இந்திய விருந்தோம்பல் பண்பைப் பாராட்டிப் பொதுமக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
