“உடனே கல்யாணம் பண்ணிக்கோ..!” காதலியின் பிடிவாதத்தால் எழுந்த தகராறு…! மறுத்த காதலனை போட்டு வெளுத்த பெண் வீட்டார்… அடுத்த நொடியே மாயமான காதலி..! குண்டூர் ரயில் நிலையத்தில் திடுக்கிடும் திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உடனே கல்யாணம் பண்ணிக்கோ..!” காதலியின் பிடிவாதத்தால் எழுந்த தகராறு…! மறுத்த காதலனை போட்டு வெளுத்த பெண் வீட்டார்… அடுத்த நொடியே மாயமான காதலி..! குண்டூர் ரயில் நிலையத்தில் திடுக்கிடும் திருப்பம்..!!

Published

on

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சாய் சந்து என்ற வாலிபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சாய் சந்துவை ஒரு யுவதி காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்திலிருந்து திருமண வரன் பார்க்கத் தொடங்கினர். இதையறிந்த அந்த பெண், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறித் தன் காதலனான சாய் சந்துவைச் சந்தித்து, உடனே தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், சாய் சந்து தற்போதைக்குத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.

காதலன் சாய் சந்து எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அந்த பெண் தன் திருமண முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் அந்த வாலிபர் அப்பெண்ணை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரைத் தன் சொந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்குத் திரும்பிய அந்த பெண் நடந்த அனைத்து விவரங்களையும் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு, வாலிபர் சாய் சந்து அந்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முயன்றபோது, கோபமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அந்த வாலிபரைத் தாக்கியுள்ளனர்.

Advertisement

இதற்கிடையில், அந்த பெண் மீண்டும் வீட்டிலிருந்து காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் பெனமலூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், குண்டூர் ரயில் நிலையத்தில் வைத்து அந்த பெண்ணைக் கண்டுபிடித்துக் காவலில் எடுத்தனர். காதலனைப் பெண் வீட்டார் தாக்கிய இந்தச் சம்பவம் விஜயவாடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in