திக் திக் திக்… மீண்டும் வெடித்த இயற்கை ஏரி..! திடீரென வெளியேறிய 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர்… நேபாளத்தை உலுக்கும் புதிய பேரழிவு அபாயம்..! உயிரைக் கையிப் பிடித்துக்கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடும் மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக் திக்… மீண்டும் வெடித்த இயற்கை ஏரி..! திடீரென வெளியேறிய 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர்… நேபாளத்தை உலுக்கும் புதிய பேரழிவு அபாயம்..! உயிரைக் கையிப் பிடித்துக்கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடும் மக்கள்..!!

Published

on

திபெத்தின் எல்லைப் பகுதியில் உள்ள இயற்கை தடுப்பு ஏரி மீண்டும் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், அப்பகுதியில் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான இடிபாடுகளால் இந்த ஏரி உருவாகியிருந்தது. அதில் சுமார் 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது ஏரி நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் பெரும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் நேபாளம் மற்றும் சீனப் பகுதி அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் வெள்ள அபாயத்தின் காரணமாக நேபாளத்தில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் முன்னெச்சரிக்கையாக சுமார் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆபத்தை உணர்ந்த உள்ளூர் மக்கள் பாதுகாப்பான உயர்ந்த இடங்களை நோக்கி உடனடியாகச் செல்லத் தொடங்கினர். அதேபோல, திபெத்தின் கிராங் பகுதியில் பணியில் இருந்த சீன மீட்புக் குழுவினரும் வாகனங்களும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குப் பின்வாங்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஏற்கெனவே ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக நேபாளத்தில் 469 நபர்களுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எல்லை இருபுறமும் சேர்த்து சுமார் 1,400 முதல் 1,500 பேர் வரை மாயமாகியுள்ளனர். பாலம் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, சேறும் சகதியுமாக உள்ளதால் மீட்புப் பணிகள் ஏற்கெனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள அபாயம் மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிகாரிகள் சூழ்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in