வேளாண் பட்ஜெட் அதிரடி..! “1 ஏக்கரில் சாதித்தால் ₹2.5 லட்சம் பரிசு!” இயற்கை விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ – பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேளாண் பட்ஜெட் அதிரடி..! “1 ஏக்கரில் சாதித்தால் ₹2.5 லட்சம் பரிசு!” இயற்கை விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ – பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு..!!

Published

on

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தி ‘அஞ்சலை அம்மாள் விருது’ மற்றும் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து, தங்களது அதிகபட்ச விளைச்சல் திறனை நிரூபிக்க வேண்டும். இதில் மாநில அளவில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ₹2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ₹1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ₹1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

இதனுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சிறந்த முறையில் உயிர்ம விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு முன்னோடி இயற்கை விவசாயி ‘நம்மாழ்வார் பெயரில் சிறப்பு விருது’ வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதுகள் மற்றும் நிதியுதவிகள் மூலமாகத் தமிழகத்தில் பாரம்பரிய விவசாய முறைகளும், நவீன சாகுபடி தொழில்நுட்பங்களும் பெரிய அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in