பகீர்..! 2028 வரை டெண்டர் போட்டு… புள்ளைய CM ஆக்கிரலாம்னு நினைச்சாரு… ஆனா ரிசல்ட் அன்னைக்கு நெஞ்ச மட்டும் தான் பிடிக்கல… திமுகவை கிழித்து தொங்கவிட்ட ஆதவ் அர்ஜுனா! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! 2028 வரை டெண்டர் போட்டு… புள்ளைய CM ஆக்கிரலாம்னு நினைச்சாரு… ஆனா ரிசல்ட் அன்னைக்கு நெஞ்ச மட்டும் தான் பிடிக்கல… திமுகவை கிழித்து தொங்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!

Published

on

திமுக ஆட்சியில் தங்களின் துறைகளில் 2028-ஆம் ஆண்டு வரை முன்கூட்டியே டெண்டர் போட்டு அட்வான்ஸ் தொகையைப் பெற்றுச் சென்று கொண்டிருப்பதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்ததாக தங்கள் பையன் தான் முதலமைச்சர் என அனைத்து ஏற்பாடுகளுடனும் தயாராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த நாளில் நெஞ்சைப் பிடித்துக் கொள்ளாத குறைதான் எனும் அளவிற்கு அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது என்றும் அவர் திமுகவைச் சாடினார்.

மேலும், வேட்பாளராகப் போட்டியிட்ட காலத்திலேயே ஒரு ரூபாய் கொடுத்துக்கூட தவெக கட்சியினரை விலைக்கு வாங்க முடியாமல் திணறியவர்கள், தற்போது எம்.எல்.ஏ ஆன பிறகு எப்படி வாங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். திமுகவினர் தங்களை அப்ரோச் செய்த அனைத்து விவகாரங்களையும் தங்களது கட்சியினர் பக்காவாக ரெக்கார்ட் செய்து காவல்துறையிடம் ஆதாரமாகக் கொடுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

அரசியல் ரீதியாகத் தங்களை விலைக்கு வாங்கவோ அல்லது அச்சுறுத்தவோ நினைக்கும் திமுகவின் அனைத்து முயற்சிகளையும் தவெக திறம்பட எதிர்கொண்டு வருகிறது என்பதை ஆதவ் அர்ஜுனாவின் இந்த விளாசல் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in