BREAKING: மொபைலில் மது ஆர்டர்.. டாஸ்மாக்கில் வருகிறது புதிய மாற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: மொபைலில் மது ஆர்டர்.. டாஸ்மாக்கில் வருகிறது புதிய மாற்றம்..!!

Published

on

டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் நுகர்வோர் தங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் எங்கு அமைந்துள்ளன மற்றும் அங்குக் கையிருப்பில் உள்ள மது வகைகள் என்னென்ன போன்ற விபரங்களை மிக எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், தங்களுக்குத் தேவையான மது வகையைச் செயலியிலேயே தேர்வு செய்து, ஆன்லைன் மூலமாகவே அதற்கான தொகையை நேரடியாகச் செலுத்தும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட உள்ளது.

பணம் செலுத்தியவுடன் நுகர்வோரின் மொபைல் எண்ணிற்கு ஒரு பிரத்யேக க்யூஆர் கோடு அனுப்பி வைக்கப்படும். இந்த க்யூஆர் கோடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்பித்து, கூடுதல் கட்டணம் ஏதுமின்றி தங்களுக்குத் தேவையான மதுவை நுகர்வோர் பெற்றுக் கொள்ளலாம். கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதலாக ஐந்து அல்லது பத்து ரூபாய் வசூலிக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொண்டு வரப்படும் இந்த புதிய நடைமுறையால், வழக்கமாக மது வாங்கும் தொகையை விட நுகர்வோருக்குச் சற்று விலை குறைய வாய்ப்புள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in