குடிமகன்களுக்கு குட் நியூஸ்…! இனி டாஸ்மாக் கடைகள் பக்கத்திலேயே.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடிமகன்களுக்கு குட் நியூஸ்…! இனி டாஸ்மாக் கடைகள் பக்கத்திலேயே.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

Published

on

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் அமைப்பது தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு அதிரடி திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, டாஸ்மாக் கடைகளின் உள்ளே அல்லது அதற்கு மிக அருகாமையிலேயே பார்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், தற்போதைய புதிய திருத்தத்தின்படி, டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரம் வரையிலான சுற்றளவுக்குள் பார்கள் அமைத்துக் கொள்ளத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த புதிய 100 மீட்டர் விதிமுறையின் அடிப்படையிலேயே புதிய பார்களுக்கான உரிமங்கள் மற்றும் அனுமதிகள் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய விதி மாற்றம் மதுப்பிரியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், பொதுமக்கள் மத்தியில் கலவையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in