“என்ன கொடுமையோ இது..!” 2 மாதக் குழந்தையுடன் மழையில் கதறும் தாய்… கணவன் செய்த கொடூரம்.. உறைந்துபோக வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்ன கொடுமையோ இது..!” 2 மாதக் குழந்தையுடன் மழையில் கதறும் தாய்… கணவன் செய்த கொடூரம்.. உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!

Published

on

காதலை நம்பி தனது வீடையும் குடும்பத்தையும் துறந்து வந்த பெண்ணொருவர், இன்று இரண்டு மாதப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அனாதையாக வீதியில் நிற்கும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை தீவிரமாகக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த இளைஞர் மனைவியையும் பிறந்த குழந்தையையும் தவிக்கவிட்டுச் சென்றுள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மையை மறைத்து, இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

வாடகை வீடும் கை நழுவிப்போன நிலையில், கொட்டும் மழையில் தனது கைக்குழந்தையுடன் தவிக்கும் அந்தத் தாய், தனக்கு நேர்ந்த துயரத்தை அழுகையுடன் விவரிக்கும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதற வைக்கின்றன. ஒரு தாயின் கண்ணீர் அவள் பட்ட வேதனையை மட்டுமன்றி, அந்த அறியாப் பெண்ணின் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் வெளிப்படுத்துகிறது. ஏமாற்றப்பட்ட இந்தத் தாய்க்கும் குழந்தைகக்கும் விரைவில் நீதியும் உரிய ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in