LATEST NEWS
“எய்ட்ஸ் இருக்குன்னு முன்னாடியே சொல்ல மாட்டியா டா..?” – எச்.ஐ.வி தொற்றை மறைத்த நோயாளி… கொதித்தெழுந்து கன்னத்தில் அறைந்த மருத்துவர்.. வைரலாகும் பகீர் வீடியோ.!!
இந்தியாவில் எச்.ஐ.வி தொற்றை மறைத்து எலும்பு முறிவுச் சிகிச்சை பெற முயன்ற நோயாளியை, மருத்துவர் ஒருவர் கோபத்தில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு நடத்தும் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் (MYH) இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலானது.
விபத்தில் கால் எலும்பு முறிந்த 45 வயதுடைய நோயாளி ஒருவர், முதலுதவி மற்றும் தையல் போடும் வரை தனக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கும் விபரத்தை மருத்துவ ஊழியர்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால் தமக்கும் மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதை அறிந்த எலும்பியல் துறை ஜூனியர் மருத்துவர் கடும் ஆத்திரமடைந்தார். ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த நோயாளியை அவர் தொடர்ந்து கன்னத்தில் அறைந்து, கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார்.
https://twitter.com/aishaalsayed9/status/2081089852313866726/video/1
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஜூனியர் மருத்துவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. நோயாளிகள் தங்களின் உடல்நலக் குறைபாடுகளை மறைப்பது தவறு என்றாலும், மருத்துவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
