I AM SORRY என முதல்வர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்… உடனே கூட்டத்தை கூட்டுங்க … கொந்தளித்த ஜவஹிருல்லா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

I AM SORRY என முதல்வர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்… உடனே கூட்டத்தை கூட்டுங்க … கொந்தளித்த ஜவஹிருல்லா..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி முதல்வர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சித் (மமக) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல் உலகில் இத்தகைய நாகரிகமற்ற அணுகுமுறை ஏற்புடையதல்ல என்றும், அரசியல் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் காக்கும் வகையில் முதல்வர் விஜய் உடனடியாக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி, ‘ஐ அம் சாரி’என்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்த சிறைக்கொடுமைகளும் தியாகங்களும் நாடறிந்த உண்மை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியது தவறான முன்னுதாரணம் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்குள் இருக்கும் அரசியல் விமர்சனங்களை நாகரிகமான முறையில் முன்வைக்க வேண்டுமே தவிர, ஒரு தலைவரின் சுயமரியாதையையும் கடந்த கால தியாகங்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதால் முதல்வர் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பதே முறை என்றும் ஜவாஹிருல்லா தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in