“அது யாருன்னு கண்டுபிடிக்க தான் வச்சேன் சார்” பெண்கள் ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா.. மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த லேடி வார்டன் கொடுத்த விளக்கம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அது யாருன்னு கண்டுபிடிக்க தான் வச்சேன் சார்” பெண்கள் ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா.. மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த லேடி வார்டன் கொடுத்த விளக்கம்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியின் பொதுக் குளியலறையில், மாணவிகள் குளிப்பதைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த பெண் வார்டன் ஆர்த்தி என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 8 அன்று அந்த விடுதிக்கு புதிதாக வந்த மாணவி ஒருவர் குளியலறைக்குச் சென்றபோது, அங்கே ரகசியமாக ஆன் செய்து வைக்கப்பட்டிருந்த ஆண்ட்ராய்டு மொபைல் போன் கேமராவைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த மொபைல் போனின் கேமரா நேரடியாக டாய்லெட் பகுதியை நோக்கி வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்த அந்த மாணவி, உடனே தனது மொபைல் மூலம் அதனை வீடியோ எடுத்து ஆதாரமாக்கி, மற்ற மாணவிகளிடம் புகாரளித்ததை அடுத்து இந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாத்ரூமில் மொபைல் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்த விபரம் பரவியதும் விடுதி மாணவிகள் கடும் ஆத்திரமடைந்து பெற்றோர்களுக்கும், அவசரக் காவல் உதவி எண் 112-க்கும் தகவல் அளித்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேண்ட் காவல் நிலையப் போலீசார், சம்பந்தப்பட்ட பெண் வார்டனின் மொபைல் போனைப் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் பல மாணவிகள் குளிக்கும் ஆபாச வீடியோக்கள் வார்டனின் மொபைலில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோக்கள் வேறு எங்கும் கசிந்துவிடக் கூடாது என்பதற்காகப் போலீசார் முன்னிலையிலேயே அவை அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட்டன.

Advertisement

போலீசாரின் விசாரணையில் கைதான வார்டன் ஆர்த்தி, “மாணவிகள் நாப்கின்களை குளியலறையில் கண்ட இடங்களில் வீசி விடுகிறார்கள், அதை யார் செய்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்காகவே கேமராவை ஆன் செய்து வைத்தேன்” என்று ஒரு அற்பத்தனமான விளக்கத்தைக் கூறித் தப்பிக்க முயன்றுள்ளார். எனினும், இந்த விபரீதப் பதிலை போலீசாரும் மாணவிகளும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர். மாணவிகளின் பாதுகாப்பையும் தனிமனித உரிமையையும் பறிக்கும் வகையில் செயல்பட்ட அந்த வார்டன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நகரக் காவல் எஸ்பி நிமிஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in