LATEST NEWS
“அடேங்கப்பா…ஒரு மாச வாடகை ரூ.60 ஆயிரமா..?! அப்படி என்னதான் இருக்கு இந்த வீட்டுல..! பெங்களூரு பெண்ணின் வீடியோவைப் பார்த்துத் திகைத்துப்போன இணையம்..!!”
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், புதிய ஐடி பூங்காக்களின் வருகை மற்றும் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால் வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெலந்தூர், வொயிட்ஃபீல்ட், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் போன்ற முக்கியப் பகுதிகளில் வீடுகளின் பற்றாக்குறை நிலவுவதால், மாத வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. மேலும், வீட்டின் உரிமையாளர்கள் முன்பணத்தையும் உயர்த்திக் கேட்பதால் வாடகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த வாடகை உயர்வுக்கு மத்தியில், கரிஷ்மா என்ற பெண் பகிர்ந்த ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு மாத வாடகையாக ரூ.60,000 செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், தனது அறையின் ஜன்னல் மற்றும் பால்கனியிலிருந்து தெரியும் திறந்தவெளி, பசுமை நிறைந்த நகரக் காட்சியைக் காட்டி, “இந்தக் காட்சிக்கு மாதத்திற்கு ரூ.60,000 வாடகை கொடுப்பது சரியானதா அல்லது நான் அதிக பணம் செலவழிக்கிறேனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
https://www.instagram.com/reel/DbGOEuwSzLh/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதளப் பயனர்கள் இருவேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், வாடகைக்காகவே மாதத்திற்கு ரூ.60,000 விரயம் செய்வதற்கு பதிலாக, சிறிய நகரங்களில் கடன் தவணை செலுத்திச் சொந்த வீட்டையே வாங்கிவிடலாம் எனக் விமர்சிக்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினரோ, பெங்களூரு போன்ற பரபரப்பான நகரத்தில் அமைதியான சூழல், நல்ல அமைவிடம் மற்றும் அழகான திறந்தவெளிப் பார்வை கிடைப்பதற்கு இந்தத் தொகை நியாயமானதுதான் என்று ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.
