LATEST NEWS
BREAKING: முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு..!!
பீகாரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வு நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் இளைஞர்களுடன் இணைந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், ஜேஜேடி கட்சித் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் விவகாரத்தில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கோரி நடைபெற்ற இந்த அதிரடிப் போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட தேஜ் பிரதாப் யாதவை விடுவிக்க அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தீவிர சட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு நீதிமன்ற ஜாமீன் கோரி நாளை அதிகாரப்பூர்வமாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவரது கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை பீகார் மற்றும் தேசிய அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
