அடைகொடுமையே… பழிவாங்க இப்படியா பண்ணுவீங்க..? தாய்மாமன், அத்தை மீது மாற்றி மாற்றி போக்சோ வழக்கு..! சுப்ரீம் கோர்ட் கடும் கவலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடைகொடுமையே… பழிவாங்க இப்படியா பண்ணுவீங்க..? தாய்மாமன், அத்தை மீது மாற்றி மாற்றி போக்சோ வழக்கு..! சுப்ரீம் கோர்ட் கடும் கவலை..!!

Published

on

கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் தகராறுகளில், ஒருவரையொருவர் பழிவாங்குவதற்காக குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்தும், இதில் குழந்தைகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் உச்ச நீதிமன்றம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. பொதுவாகத் திருமண முறிவுக்குப் பின் ஏற்படும் சண்டைகளில் மாமியார், மாமனார் மற்றும் உறவினர்களைப் பழிவாங்கும் நோக்கில் வழக்குகளில் சிக்க வைப்பது சர்வ சாதாரணமாகி வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற தம்பதியரிடையே குழந்தைகள் பராமரிப்பு உரிமை தொடர்பாக எழுந்த தகராறில், இரு தரப்பினரும் உறவினர்கள் மீது மாற்றி மாற்றிப் போக்சோ புகார்களை அளித்துள்ளனர். முதலில் இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தாய்மாமன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கணவர் புகார் அளித்தார். அதற்குப் பதிலடியாக, தனது மகனுக்குக் கணவரின் சகோதரி பாலியல் தொல்லை கொடுத்ததாக மனைவி போக்சோ புகார் அளித்தார்.

Advertisement

இதை எதிர்த்து கணவரின் சகோதரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் அமர்வு விசாரித்து, அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது குழந்தைகள் மீதான உண்மையான குற்றச்சாட்டு அல்ல என்றும், குழந்தைகள் பராமரிப்பு உரிமைப் போரில் பிறந்த கசப்பான பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், பழிவாங்குவதற்காகப் பெற்ற பிள்ளைகளையே இதுபோன்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளுக்குப் பயன்படுத்துவது வேதனையளிப்பதாகத் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in