இன்னும் திருந்தாத மதவெறி..! நீ இந்துவா? முஸ்லிமா?’.. சிறுவர்களை மிரட்டித் தாக்கிய கொடூரம்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்னும் திருந்தாத மதவெறி..! நீ இந்துவா? முஸ்லிமா?’.. சிறுவர்களை மிரட்டித் தாக்கிய கொடூரம்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

காஜியாபாத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பரேலியைச் சேர்ந்தவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இரு சிறுவர்கள் ஜந்தர் மந்தர் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பகல் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, இரவில் குருத்வாராவில் தங்குவதாக அச்சிறுவர்கள் கூறுகின்றனர்.

அப்போது, வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சத்தியம் பண்டிட் என்பவர், அச்சிறுவர்களிடம் பெயரைக் கேட்டுத் திட்டிக் கொண்டே அவர்களைத் தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. “நீங்கள் இந்துக்களா அல்லது முஸ்லிம்களா?” என்று அவர் கேட்க, அச்சிறுவர்கள் தங்களை இந்துக்கள் என்று கூறியபோதிலும் அவர் அவர்களைத் தாக்குகிறார். மதத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படும் இடங்களுக்குச் சென்றால் மேலும் அடிப்பேன் என்று அவர் மிரட்டுகிறார். முன்பு பெயரைக் கேட்டு முஸ்லிம்கள் தாக்கப்பட்ட நிலையில், தற்போது இந்துச் சிறுவர்களும் இவ்வாறு பகிரங்கமாகத் தாக்கப்படுவது மாநிலத்தில் நிலவும் வெறுப்புச் சூழலையே காட்டுகிறது என்றும், காவல்துறை இவர் மீது நடவடிக்கை எடுக்குமா என்றும் அந்த சமூக வலைதளப் பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in