LATEST NEWS
“டாஸ்மாக் ஊழியர்களே உஷார்.. !” 3-வது முறை மாட்டுனா கதி அவ்வளவுதான்… டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதன் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இந்த புதிய வழிகாட்டுதல்களை டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, அதிக விலைக்கு மது விற்பனை செய்து தொடர்ந்து மூன்று முறை தவறிழைக்கும் ஊழியர்களின் வேலை உடனடியாகப் பறிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாகப் பணம் வாங்கும் ஊழியர்களுக்கு ரூ10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஊழியர்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
