LATEST NEWS
“மீண்டும் அறிவாலயம் வாங்க..!” ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னல்.. 150 பேருக்கு அடிக்கப்போகும் யோகம்.. அறிவாலய வட்டாரத்தின் ஹாட் அப்டேட்..!!
கட்சி விதிக மீறல்கள் காரணமாக திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த மேடைப் பேச்சாளர்கள் மற்றும் மாநகர நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தாய் கழகத்தில் தங்களை மீண்டும் இணைக்குமாறு மன்னிப்புக் கடிதம் அளித்துக் காத்திருக்கும் இவர்களுக்கு, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதால், தலைமையின் அடுத்தகட்ட அறிவிப்பை இவர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
மாற்றுக்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளில் இணையாமல், திமுக மீதே தொடர்ந்து விசுவாசத்துடன் இருப்பதாகச் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளனர். இக்கருத்தைக் பரிசீலித்த மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தல் களத்தைக் கருத்தில் கொண்டும் கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், நீக்கப்பட்டவர்களைக் கட்டம் கட்டமாக மீண்டும் கட்சியில் இணைக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
