“அம்மா, அப்பாக்கு அப்புறம்… குழந்தைங்க வாயில வர்ற ஒரே பேரு ‘விஜய் மாமா’தான்..!” புதுக்கோட்டை மேடையில் C. விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி உரை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா, அப்பாக்கு அப்புறம்… குழந்தைங்க வாயில வர்ற ஒரே பேரு ‘விஜய் மாமா’தான்..!” புதுக்கோட்டை மேடையில் C. விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி உரை..!!

Published

on

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் உரைநிகழ்த்திய நிர்வாகி C. விஜயபாஸ்கர், தற்போது பிறக்கும் குழந்தைகள் கூட தங்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக விஜய்யை ‘விஜய் மாமா’ என்றே அன்போடு அழைப்பதாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை தவெகவின் எஃகு கோட்டையாக மாற்றுவோம் என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சாரைசாரையாகக் கட்சியில் இணைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான விஜய் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பும் நம்பிக்கையுமே பலரும் தவெகவில் இணைவதற்குக் முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தொண்டர்களும் மக்களும் காட்டும் இந்த பேராதரவு, வரும் காலங்களில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தவெகவை பலமிக்க இயக்கமாக மாற்றும் என்று தனது உரையில் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in