“வங்கியிலேயே விழுந்த பளார்..!” மேலாளரைக் கயல்விழி அழகிரி அறைய என்ன காரணம்?.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வங்கியிலேயே விழுந்த பளார்..!” மேலாளரைக் கயல்விழி அழகிரி அறைய என்ன காரணம்?.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!!

Published

on

சென்னையில் வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியின் மின்தூக்கி திடீரென பழுதானதால், வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரைத் தொடர்புகொள்ள முடியாததால் நேரடியாக கயல்விழியிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி நேராக வங்கிக்கு வந்து, மேலாளரின் அறைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரது கன்னத்தில் பளாரென அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் முழுவதும் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் காட்சிகள் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் எஸ்பிஐ முதன்மை மேலாளர் அளித்த புகாரின் பேரில், சாஸ்திரி நகர் காவல்துறையினர் கயல்விழி அழகிரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட உரிமையாளரான தனது அதிகாரத்தைக் காட்டி வங்கி மேலாளரைக் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in