அடேங்கப்பா..! 10 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு.. வட்டிக்கு மட்டுமே இத்தனை கோடியா?.. வெளியான ஷாக்கிங் புள்ளிவிவரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! 10 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு.. வட்டிக்கு மட்டுமே இத்தனை கோடியா?.. வெளியான ஷாக்கிங் புள்ளிவிவரம்..!!

Published

on

தமிழகத்தின் சொந்த நிதி வரவை காட்டிலும் வழக்கமான செலவுகள் மிஞ்சி நிற்பதால், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிர்வாகத் தேவைகளுக்கும் அரசு கடன்பத்திரங்கள் மற்றும் வங்கிக் கடன்களையே பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு ரூ.20,881 கோடி கடன் வாங்கியுள்ளதுடன், இந்த நிதியாண்டு முழுவதும் ரூ.1.22 லட்சம் கோடி வரை கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ள நிலையில், வாங்கிய கடன்களுக்கான வட்டியாகவே கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.14,618 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த நிதியாண்டு முழுவதும் கடன்களுக்கான வட்டியாக மட்டும் ரூ.76,451 கோடி வரை செலவிட அரசு மதிப்பிட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.82 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு செலுத்திய வட்டித் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது; 2021-22ல் ரூ .41,564 கோடியாக இருந்த வட்டிச் செலவு, 2025-26ல் ₹67,050 கோடியாக உயர்ந்து, 2026-27 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.76,452 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாயில் ஐந்தில் ஒரு பகுதி வட்டி செலுத்தவே செலவிடப்படுவதால், மாநிலத்தின் நிதி நிர்வாகம் சவாலான சூழலைச் சந்தித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in