அடப்பாவமே..! 26 வயது பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு… கண் மருத்துவ PG மாணவிக்கு என்ன ஆச்சு?.. உறைந்து போக வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவமே..! 26 வயது பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு… கண் மருத்துவ PG மாணவிக்கு என்ன ஆச்சு?.. உறைந்து போக வைக்கும் பின்னணி..!!

Published

on

தெலுங்கானா மேட்ச்சல் மாவட்டம் நாகாரத்தில் உள்ள மேற்கு காந்தி நகரில், ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து 26 வயதான தீக்ஷிதா என்ற மருத்துவ மேல்படிப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினரின் முதற்கட்ட தகவலின்படி, பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவப் பிரிவில் முதலாம் ஆண்டு மேல்படிப்பு படித்து வந்த இவர், வெள்ளிக்கிழமை அன்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அசம்பாவிதத்திற்கான பின்னணி மற்றும் தற்கொலைக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in