தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு.. தமிழக அரசு அதிரடி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு.. தமிழக அரசு அதிரடி…!!

Published

on

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பார்களுக்கான உரிமம் மற்றும் ஒப்பந்தக் காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, உரிமம் காலாவதியான அனைத்து பார்களையும் இன்று முதல் மூட வேண்டும் என்று அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் தலைமை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வரை பார்கள் இயங்காது என்பதால், அரசின் இந்த திடீர் அறிவிப்பு மதுப்பிரியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in