LATEST NEWS
இவர்களும் ராஜினாமாவா..? எங்களுக்கு பதவியே வேண்டாம்… கட்சி தலைமைக்கு பறந்த கடிதம்… எடப்பாடி தலையில் இறங்கிய அடுத்த இடி…!!
அதிமுகவில் தனக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கட்சித் தலைமை மீது கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்சியில் மீண்டும் உரிய பதவிகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இவருடன் இணைந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கட்சிப் பொறுப்புகள் ஏதும் தேவையில்லை எனக் கூறி தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கட்சியில் எந்தவிதமான உயர் பதவிகளும் தங்களுக்கு வேண்டாம் என்றும், வெறும் சாதாரணத் தொண்டர்களாக மட்டுமே இருந்து செயல்பட விரும்புவதாகவும் இந்த முக்கிய நிர்வாகிகள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இணைந்து கட்சித் தலைமைக்கு எதிராக இத்தகைய அதிருப்தியான முடிவை எடுத்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
