LATEST NEWS
அரசுப்பணி தருவதாகக் கூறி யாரிடமும் பணம் வாங்கவில்லை.. எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை…. மாஜி அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!
அரசுப்பணி தருவதாகக் கூறி யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த அவர், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் பேசிய அவர், போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையில் தினந்தோறும் 200 முதல் 300 பேர் வரை தன்னைச் சந்திப்பது வழக்கம் என்று குறிப்பிட்டார். பொதுமக்களுடனான அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதை எல்லாம் துல்லியமாகக் கண்காணிப்பது சாத்தியமில்லை என்று கூறிய அவர், இந்த மோசடிப் புகாருக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
