LATEST NEWS
“அட இது ஒரிஜினல் இல்லையா?!”.. டிரம்பிற்குப் பின்னால் நிற்பது யார்?.. இணையத்தை அதிரவைத்த செம ட்விஸ்ட்.. ஷாக்கில் நெட்டிசன்கள்..!!
சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, அவருக்குப் பின்னால் அச்சு அசலாக அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு நபர் நின்றுகொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் மீது தாக்குதல் ஏதும் நடந்தால் பயன்படுத்துவதற்காக “பாடி டபுள்” வைக்கப்பட்டுள்ளாரா என நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கினர். மேலும், பிரபல தொகுப்பாளர் ஜான் ஸ்டீவர்ட் தனது ‘தி டெய்லி ஷோ’ நிகழ்ச்சியில் இதைக் கிண்டல் செய்து பேசியது இந்த சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியது.
ஆனால், இந்த உருவ ஒற்றுமைக்கான உண்மையான பின்னணி தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. டிரம்பிற்குப் பின்னால் நின்றிருந்த அந்த நபர் அவரது பாடி டபுள் கிடையாது; அவர் டிரம்பின் மனைவியான மெலனியா டிரம்பின் தந்தையும், டிரம்பின் மாமனாருமான விக்டர் க்னாவ்ஸ் ஆவார். 80 வயதைக் கடந்த விக்டர் க்னாவ்ஸ், டிரம்பைப் போலவே தலைமுடி பாணி மற்றும் ஆடை அலங்காரத்தைக் கொண்டிருந்ததால் தான் இணையத்தில் இத்தகைய பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
