“என்னது நிஜமாலுமே டிராகன் வந்துடுச்சா?!”.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. இறுதியில் காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னது நிஜமாலுமே டிராகன் வந்துடுச்சா?!”.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. இறுதியில் காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க ‘டவர் ஆஃப் லண்டன்’ கோட்டை மற்றும் தேம்ஸ் நதிக்கு மேலேயுள்ள ஆகாயத்தில், கற்பனை கதைகளில் வரும் பிரம்மாண்ட ‘டிராகன்’ போன்ற ஒரு உருவம் கம்பீரமாகச் சிறகடித்துப் பறந்த காட்சி அங்குள்ளவர்களை உறைந்துபோக வைத்தது. பார்ப்பதற்கு அச்சு அசலாகப் நிஜ டிராகனைப் போலவே காட்சியளித்த அந்தப் விசித்திரப் பொருளை, அங்கு இருந்த மக்கள் ஆச்சரியத்துடன் தங்களது மொபைல் போன்களில் பதிவு செய்தனர். அந்தச் சுவாரஸ்யமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் அதிர்வலைகளையும் தீயாய் பரவும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளன.

ஆனால், இந்த நிகழ்வு ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ தொடரின் 3-வது சீசன் தொடக்கத்தைக் கொண்டாடுவதற்காக எச்பிஓ மேக்ஸ் நிறுவனம் செய்த அதிநவீன விளம்பர உத்தியாகும். ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஏர்ஸ்டேஜ்’ நிறுவனம் 14 பொறியாளர்களின் உதவியுடன், கார்பன் ஃபைபர் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 13 கிலோ எடையில் இந்தச் செயற்கை ‘சைராக்ஸ்’ டிராகனை உருவாக்கியிருந்தது. 23 அசையும் பாகங்கள் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் மணிக்கு 35 கி.மீ வேகத்தில் நிஜ உயிரினம் போலப் பறந்த இந்த டிராகன் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in