“Blastu Blastu’ ” யாரு எக்கேடு கெட்டால் எனக்கென்ன..? என கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்” -எடப்பாடி பழனிசாமி அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Blastu Blastu’ ” யாரு எக்கேடு கெட்டால் எனக்கென்ன..? என கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்” -எடப்பாடி பழனிசாமி அறிக்கை..!!

Published

on

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மக்கள் மருத்துவமனைகளில் அவதிப்பட்டு வரும் வேளையில், தற்போதைய தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து செல்ஃபி எடுத்து கொண்டாடுவதாக அவர் சாடியுள்ளார். மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தங்களது பணிகளுக்கு ‘லீவு’ போட்டுள்ளதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன என்ற மனநிலையில், ‘Blastu Blastu’ கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கும் இந்த புதிய அரசை ரோம் நகரம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ (Nero) மன்னனின் ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறியுள்ள அவர், எலி கடியால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடனடியாக உரிய உயர் மருத்துவச் சிகிச்சை வழங்குவதோடு, தகுந்த இழப்பீட்டையும் தற்போதைய அரசு வழங்க வேண்டும் என அதிமுக சார்பாக வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in