LATEST NEWS
எடப்பாடியில் மினி ஸ்டேடியம்.. இத்திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்.? இபிஎஸ் கோரிக்கைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்..!!
எடப்பாடி தொகுதி அரசுப் பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை விரைந்து முடிக்கக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். இத்திட்டத்திற்கான தேவைகளை வலியுறுத்தி அவர் அவையில் பேசினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஸ்டேடியம் அமைக்கும் பணிக்கான வடிவமைப்புகள் மற்றும் திட்டவடிவங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றங்கள் முடிந்தவுடன் விரைவில் பணிகள் மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
