LATEST NEWS
“அடக்கடவுளே.. மலைப்பாதை விளிம்பில் பைக்குடன் உயிருக்குப் போராடிய வாலிபர்..!” காரில் வந்த குடும்பத்தினர் செய்த அசாத்திய காரியம்… இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!
இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டம் பனிகேத் பகுதியில், பருவமழை வெள்ளத்தின் போது மலைப்பாதை சாலையின் விளிம்பில் தனது பைக்குடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பைக் ரைடர் ஒருவரை அங்குக் காரில் சென்ற குடும்பத்தினர் சமயோசிதமாகச் செயல்பட்டு மீட்ட நெஞ்சைத் தொடும் நேரடி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மலைப் பகுதிகளில் பெய்து வரும் அசுர பருவமழை காரணமாகச் சாலைகளில் திடீரென அசுர வேகத்தில் வெள்ள நீர் பாய்ந்து வரும் நிலையில், அந்த பைக் ரைடர் சாலையின் ஆபத்தான விளிம்பில் பைக்குடன் சிக்கிக்கொண்டு, வெள்ளத்தின் வேகத்தால் அடித்துச் செல்லப்படும் இக்கட்டான சூழ்நிலையில் தவித்துள்ளார்.
https://twitter.com/themodernhp/status/2094497791792001043/video/1
அந்தச் சமயத்தில் அந்தப் பாத வழியாகத் தனது காரில் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த நபர், பைக் ரைடரின் நிலையைப் பார்த்துத் துளியும் தாமதிக்காமல் உடனடியாகத் தனது காரை நிறுத்தி உதவி செய்யக் களமிறங்கியுள்ளார். காரில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்டு, வெள்ளத்தில் சிக்கியிருந்த அந்த வாலிபரையும் அவரது பைக்கையும் பத்திரமாக இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர். “மலைப் பகுதிகளில் பெய்யும் பருவமழை எந்த நொடியிலும் ஆபத்தாக மாறலாம்; ஒரு சாதாரணப் பயணம் கூட திடீரென உயிர் பிழைப்பதற்கான போராட்டமாக மாறிவிடும்” என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள இந்த மீட்பு வீடியோ தற்பொழுது இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது.
