LATEST NEWS
இடிபாடுகளுக்குள் 3 நாட்கள்…! உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி.. நேபாள இடிபாடுகளில் 60 மணி நேரப் போராட்டம் – உலகை உலுக்கும் வைரல் வீடியோ..!!
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 6 வயது சிறுமி மனிஷா என்பவரை, சுமார் 55 முதல் 60 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. நேபாள ஆயுதப் போலீஸ் படையினர் அந்தச் சிறுமியைப் பத்திரமாக மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த உண்மைச் சம்பவத்தின் மீட்பு வீடியோ இணையத்தில் வெளியாகி, மனிதநேயத்தின் அடையாளமாக உலகளவில் வைரலாகி வருகிறது.
இருப்பினும், இணையத்தில் பரவி வரும் இந்த வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. வீடியோவில் உள்ள சில காட்சிகள் இயல்பற்றதாகவும், சிறுமியின் கண்கள், முகம் மற்றும் கைகளின் அசைவுகள் செயற்கையாகவும் தெரிவதால், இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று பலரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
https://twitter.com/Ayesha786Majid/status/2094234268474183886/video/2
பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் உண்மைத் தன்மை அறியும் அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில், சிறுமி மீட்கப்பட்டது 100% உண்மை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், மீட்புப் பணியின் போது எடுக்கப்பட்ட தெளிவற்ற, மங்கலான அசல் வீடியோவை, ஏஐ கருவிகளின் உதவியோடு எடிட் செய்து, காட்சிகளைத் தெளிவுபடுத்தி யாரோ இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் இந்த வீடியோவை முற்றிலும் பொய்யானது என்று கூற முடியாது என்றாலும், இதில் ஏஐ தொழில்நுட்பத்தின் தலையீடு இருப்பது உண்மைதான் எனத் தெரியவந்துள்ளது.
