LATEST NEWS
இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி..! ராஜினாமா கடிதத்துடன் அதிமுக ஆபீசுக்கு விரையும் சி.வி.சண்முகம்..? ராயப்பேட்டையில் உச்சக்கட்ட பதற்றம்..!!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திடீரெனப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா கடிதங்களுடன் கட்சித் தலைமை அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். இந்த அதிரடிப் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் தங்களது பதவிகளைத் துறக்கும் கடிதங்களுடன் வந்திருந்தது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளைத் தொடர்ந்து சி.வி.சண்முகமும் தனது மாநிலங்களவை எம்.பி பதவி மற்றும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளை ராஜினாமா செய்யும் கடிதத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல் காரணமாகக் கட்சி கட்டமைப்பு பலவீனமடையும் சூழல் உருவாகியுள்ளதால், தலைமை அலுவலக வளாகத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கூடி அடுத்தகட்ட நகர்வுகளைப் பதற்றத்துடன் கவனித்து வருகின்றனர்.
