LATEST NEWS
“டீல் ஓவர்.. தவெகவில் இணையும் பாமகவின் முக்கிய புள்ளி.. ஜான் ஆரோக்கியசாமியின் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்.. பனையூரில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.. தமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்”..!!!
பாமகவின் முக்கிய பிரமுகரும், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அருள், தவெகவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளன. இதன் வழியாக, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அருள் இணைவதற்கான வாய்ப்புகள் முழுமையாக உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, பாமகவிலிருந்து விலகித் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்த முக்கிய நிர்வாகிகளை உடனடியாகக் கட்சியில் சேர்ப்பதில் தவெக தலைமை ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டி வந்தது. பிற கட்சிகளிலிருந்து, குறிப்பாகப் பாமக போன்ற வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை உள்வாங்குவது கட்சிக்குள்ளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துத் தவெகவின் வியூகக் குழு தீவிரமாக ஆராய்ந்து வந்தது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார வியூகங்களையும் அரசியல் நகர்வுகளையும் பின்னணியில் இருந்து திட்டமிட்டு வரும் பிரபல அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, பாமக அருளின் சேர்க்கைக்குத் தனது முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளார். வட தமிழகத்திலும் கொங்கு மண்டலத்திலும் அருளுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் தேர்தல் கள அனுபவம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் அமைப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த உதவும் என ஜான் ஆரோக்கியசாமி கணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
