மதுபிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி க்யூவில் நிற்கவே தேவையில்லை.. டாஸ்மாக் பிரியர்களுக்கு தமிழக அரசின் மெகா சர்ப்ரைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மதுபிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி க்யூவில் நிற்கவே தேவையில்லை.. டாஸ்மாக் பிரியர்களுக்கு தமிழக அரசின் மெகா சர்ப்ரைஸ்..!!

Published

on

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காகத் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 4048 மதுக்கடைகளிலும் எந்தெந்த பிராண்ட் மதுவகைகள் இருப்பில் உள்ளன, அவற்றின் சரியான விலை என்ன என்பதை வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எளிதாகத் தெரிந்துகொண்டு முன்பதிவு செய்ய முடியும்.

இந்த முறையில் முன்பதிவு செய்து பணத்தைச் செலுத்தியவுடன், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு QR கோடுடன் கூடிய ரசீது மற்றும் சம்பந்தப்பட்ட மதுக்கடைக்குச் செல்வதற்கான வரைபடமும் (Map) வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கடைக்குச் சென்று அந்த QR கோடை காண்பித்துத் தங்களுக்குரிய மதுபாட்டில்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த இணையதளத்தில் நுழையும் போதே வயது மற்றும் பாலினம் குறித்த விவரங்கள் கேட்கப்படும். இதில் 21 வயது நிறைவடைந்த நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை முன்பதிவு செய்யும் அனுமதி வழங்கப்படும்.

Advertisement

இப்புதிய திட்டத்தின் முக்கிய அம்சமே இதில் நிலவும் முழுமையான வெளிப்படைத்தன்மை தான். பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் MRP விலையை மட்டுமே ஆன்லைனில் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், ஊழியர்கள் கூடுதல் பணம் அல்லது கமிஷன் கேட்கிறார்கள் என்ற புகார்களுக்கு இனி இடமிருக்காது. அதேபோல, கடைகளில் “ஸ்டாக் இல்லை” என்று பொய் சொல்வதையோ அல்லது குறிப்பிட்ட பிராண்டுகளை மறைத்து வைப்பதையோ தவிர்க்க முடியும். நிர்வாகத்தை மேலும் சீரமைக்கவும், இத்திட்டத்தை தங்கு தடையின்றி செயல்படுத்தவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in