LATEST NEWS
“அந்த விஷயத்திற்காக கண்டித்த தாய்” வீட்டில் யாரும் இல்ல நேரத்தில்… பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை செய்ததற்கான திடுக்கிடும் காரணம்…!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது குழந்தைகளுடன் மரக்காணம் பகுதியில் வசித்து வருகிறார். அவர்களது மகன் தியோ ஆழிசை அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மாணவர் தியோ ஆழிசை படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, அவரது தாயார் ஆர்த்தி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். வீட்டிற்குத் திரும்பி வந்த குடும்பத்தினர், சிறுவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் விரைந்து வந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான துல்லியமான காரணம் குறித்துக் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துயரமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
