போலி என்கவுண்டர் முதல் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் வர… பினாமிகள் கூடாரமான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் சாம்ராஜ்யம்.. அதிர்ச்சியில் அதிரும் தமிழக காவல்துறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

போலி என்கவுண்டர் முதல் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் வர… பினாமிகள் கூடாரமான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் சாம்ராஜ்யம்.. அதிர்ச்சியில் அதிரும் தமிழக காவல்துறை..!!

Published

on

முன்னாள் காவல்துறை ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநருமான அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அதிரடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அருண் தனது பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளதாக அந்தப் புகாரில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், போலி என்கவுண்டர்கள் நடத்தியது மற்றும் சட்டவிரோதக் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதன் மூலமாக அவர் பெரும் தொகையைச் சுருட்டியுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

முன்னாள் ஆணையர் அருண் மற்றும் அவரது மனைவியான ஐஆர்எஸ் அதிகாரி யமுனாதேவி ஆகியோரின் மகள்கள் சார்வியா அருண், இனியா அருண் ஆகியோரது பெயரில் வெங்கடேச பெருமாள் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 65 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், தனியார்கள் மூலமாகக் கோடிக்கணக்கில் கடன் வாங்கியதாக வருமான வரித்துறையில் தவறான கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டுப் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை விடுவிக்கும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய யமுனா தேவி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அருண் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கௌதம் உள்ளிட்ட சிலரைப் பினாமிகளாகப் பயன்படுத்தி சொத்துக்களைக் குவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலகத்திற்கும் தபால் மூலம் விரிவான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in