LATEST NEWS
“MGR கூட விஜய்யை ஒப்பிடாதீங்க” ஏன் தெரியுமா..? சவுக்கு சங்கர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… கடுப்பில் கதறும் திமுக உடன்பிறப்புகள்..!!
திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது சரியானதல்ல என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலில் நுழைந்த காலகட்டத்தில் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட வலுவான திமுகவின் கட்சி அமைப்பும் தொண்டர் பலமும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு பழமையான அரசியல் இயக்கத்தின் ஆதரவோ அல்லது பெரிய தலைவர்களின் அரசியல் பின்புலமோ இல்லாமல் விஜய் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு களமிறங்கியுள்ளார். சுயமாக அரசியல் களத்தில் இறங்கி, தனது ரசிகர் அமைப்பையே ஒரு முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றி வளர்ச்சி பெற்றிருப்பதே விஜய்யின் தனித்துவம் என்றும், அவர் ஒரு “சுயம்பு” அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளதாகவும் சங்கர் பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது வளர்ச்சி குறித்துப் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், எம்.ஜி.ஆருடன் ஒப்பீட்டை மறுத்து சவுக்கு சங்கர் கூறியுள்ள இந்த “சுயம்பு” என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
