அடிப்பாவி..! சாக்ஸுக்குள்ள என்னமா..? கழட்டி பார்த்ததும் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…  லாகூர் ஏர்போர்ட்டில் மாட்டிய விமானப் பணிப்பெண்… வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடிப்பாவி..! சாக்ஸுக்குள்ள என்னமா..? கழட்டி பார்த்ததும் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…  லாகூர் ஏர்போர்ட்டில் மாட்டிய விமானப் பணிப்பெண்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில் பணியில் இருந்தார். அப்போது, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், சுங்கத்துறை மற்றும் ஃபெடரல் புலனாய்வு முகமை அதிகாரிகளால் அந்த விமானத்திலிருந்து அவர் உடனடியாக இறக்கிவிடப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் அந்தப் பணிப்பெண்ணிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், அவர் தனது காலுறைகளுக்குள் (Socks) மறைத்து வைத்துப் பணத்தைக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து சுமார் 37,318 அமெரிக்க டாலர்கள் மற்றும் 40,000 சவுதி ரியால்கள் அடங்கிய பெருந்தொகையை அதிகாரிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றினர்.

Advertisement

https://twitter.com/HindustanKiArmy/status/2087043310078538018/video/1

விமானப் பணிப்பெண் காலுறையில் பணத்தை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற சம்பவம் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான பணிப்பெண்ணிடம் சுங்கத்துறை மற்றும் எஃப்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, இந்த சட்டவிரோதப் பணக்கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் இணைந்து செயல்பட்டார்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in