LATEST NEWS
“இதுதான் நம் பாரதிய பண்பாடு..!” விமான நிலைய வாசலில் முட்டி போட்ட தாய்.. பாரத மாதா மண்ணில் குழந்தையைக் கிடத்திச் செய்த நெகிழ்ச்சி செயல்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
வெளிநாட்டில் பிறந்த தனது இரண்டு மாதக் குழந்தையுடன் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்பிய இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் செய்த நெகிழ்ச்சியான செயல் பலரையும் பெருமிதத்திலும் ஆனந்தக் கண்ணீரிலும் திளைக்க வைத்துள்ளது. தான் பிறந்த மண்ணிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய மண்ணை எடுத்துத் தனது தலையில் தொட்டு வணங்கிய அந்தத் தாய், பின்னர் தனது பிஞ்சுச் குழந்தையை பாரத மாதா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தாயக மண்ணின் மீது அன்போடு கிடத்தி ஆசி பெற்றார். அதன்பிறகே அங்கிருந்த பாட்டி அந்தச் சேயைக் கைகளில் ஏந்தினார். விமான நிலையத்தின் பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும், பண்பாட்டையும் நல்ல வளர்ப்பையும் பறைசாற்றிய இந்த நெகிழ்ச்சியான காட்சி காண்போரின் இதயத்தைத் தொட்டுள்ளது.
A beautiful video which may bring tears of pride and happiness to your eyes.
“ Here is a young lady returning to India with her baby, born in a foreign land. The first thing she does after getting out of the airport is to put a speck of Indian soil on her head as a mark of… pic.twitter.com/sHjG3qvByr— Aviator Anil Chopra (@Chopsyturvey) August 11, 2026
நாட்டின் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தி, அவதூறுகளைப் பொழியும் சிலரின் நாகரிகமற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், தேசப்பற்றையும் சுய மரியாதையையும் உயர்த்திக் காட்டும் விதமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. சுதந்திர தினம் நெருங்கி வரும் இந்த வேளையில், பாரத மாதாவின் மீது நமக்கு இருக்கும் உண்மையான அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தும் சிறந்த சான்றாக இது திகழ்கிறது. ஒவ்வொருவரும் நமது தேசியக் கொடியை வீடுகளின் முன் ஏற்றித் தாய்நாட்டின் பெருமையைக் கொண்டாடுவோம் என்ற நேர்மறையான எண்ணத்தையும் இந்த வைரல் காட்சி மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.
