LATEST NEWS
“ஐயோ கொடுமையே.. ஒரே ஒரு இறுதி ஊர்வல வாகனத்தில் 54 சடலங்கள்!” தண்ணீரில் மூழ்கி அடியோடு அழுகிய மனித உடல்கள்… பத்திரிகையாளர் அஸ்வினி சுக்லா வெளியிட்ட அந்த ரியல் நரகக் காட்சி..!!
ஒரே ஒரு பிணவற வாகனத்தில் 54 உடல்கள் என்ற நேபாளத்தின் சித்வான் பகுதியிலிருந்து பத்திரிகையாளர் அஸ்வினி சுக்லா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. பல நாட்களாகத் தண்ணீரில் மூழ்கிக்கிடந்ததன் காரணமாக, அந்த உடல்கள் அனைத்தும் தற்போது அழுகத் தொடங்கியுள்ளன. இதனால், மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அந்த உடல்கள் மண்ணில் பாதுகாப்பாகப் புதைக்கப்படவுள்ளன. ஒரே ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இந்த 54 உடல்களும், மனித உறுப்புகளும் பார்ப்போரைக் கண்ணீர் சிந்த வைக்கின்றன. சில உடல்களில் கைகள் இல்லை, சிலவற்றில் கால்கள் இல்லை, இன்னும் சில உடல்களில் தலைகளே இல்லை என்ற நிலையில் அவை சிதைந்து போயுள்ளன.
https://twitter.com/PotliNews/status/2094718950907203763/video/1
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை எதிர்காலத்தில் கண்டறிவதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புக் குழுவினர் ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தனித்துவமான குறியீட்டு எண்ணை வழங்கியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் அவர்களது உறவினர்கள் அடையாளம் காண ஏதுவாக, அனைத்து உடல்களின் புகைப்படங்கள், கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் ஆகியவை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இயற்கைப் பேரிடரின் இந்த கோரத் தாண்டவம் மற்றும் மனித உயிர்களின் இந்த அவல நிலை சர்வதேச அளவில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
