LATEST NEWS
“இறைவனை விட உயர்ந்த மனிதநேயம்..!” கோவிலில் அனைவரும் வியந்து பார்த்த அந்த ஒரு நொடி… கண்ணீர்மல்க வைத்த இளம்பெண்ணின் செயல்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
கோவிலில் தீபாராதனை முடிந்ததும், அனைவரும் தங்களின் தட்டுகளில் காணிக்கை செலுத்துவதற்காக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம்பெண் தன் கையில் தட்ட ஏந்தியபடி கூட்டத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அங்கு நன்றாக ஆடை அணிந்திருந்த பணக்காரர்களிடம் தான் காணிக்கை பெறச் செல்வாள் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், அனைவரின் எண்ணத்தையும் பொய்யாக்கும் வகையில், அவள் கோவிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஏழை முதியவரை நோக்கி நேராகச் சென்றாள். நடுங்கும் கரங்களுடனும், கலங்கிய கண்களுடனும் இருந்த அந்தப் பெரியவரின் தட்டில், அவள் மிகவும் மரியாதையுடன் ஒரே ஒரு 5 ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்தாள். அதைக் கண்ட அந்த முதியவர் நெகிழ்ந்துபோய், அந்தச் இளம்பெண்ணின் கால்களைத் தொட்டு வணங்க முற்பட்டார்.
उस बेटी को दिल से सलाम..जिसने साबित कर दिया कि असली खूबसूरती इंसानियत में है❤️
मंदिर की आरती खत्म हुई, सब लोग थाली लेकर दान के लिए आगे बढ़ रहे थे। एक लड़की भी हाथ में थाली लेकर निकली।
सबको लगा अब वो अच्छे कपड़े पहने लोगों के पास जाएगी।लेकिन उसने सबको गलत साबित कर दिया।
वो… pic.twitter.com/DJ4VQHSsZV— Sachin Verma🐦 (@itSachinverma) August 11, 2026
இளம்பெண்ணும் தயங்காமல், உடனடியாகக் கீழே குனிந்து அந்த முதியவரின் கால்களைத் தொட்டு மறுவணக்கம் செலுத்தினாள். அன்று அந்தத் திருக்கோவிலில், இறைவனை விடவும் உயர்ந்த ஒரு மாபெரும் மனிதநேயப் பாடத்தை அங்கிருந்த அனைவரும் கற்றுக்கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இணையத்தில் வைரலாகி அனைவரின் நெஞ்சார்ந்த வணக்கங்களையும் அன்பையும் பெற்று வருகிறது. மரியாதை என்பது மனிதர்கள் அணிந்திருக்கும் ஆடையில் இல்லை, அது நம் இதயத்திலிருந்து வர வேண்டும் என்பதையும். வழிபாடு என்பது வெறும் பணத்தால் நடப்பதில்லை, உண்மையான தூய்மையான அன்பான உணர்வால் மட்டுமே சாத்தியம் என்பதையும் அவள் உணர்த்தினாள். உண்மையான அழகு மனிதநேயத்தில் தான் உள்ளது என்பதை நிரூபித்த அந்த மகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்!
