CINEMA
நடிகை டாப்ஸியை துபாயில் விற்க முயன்ற காதலன்…? பயமுறுத்திய தோழிகள்… நடந்தது என்ன…??
பாலிவுட் நடிகை டாப்ஸி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். “உன்ன வெள்ளாவி வச்சி தான் வெளுத்தங்களா” என்ற படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் கடந்த 2024 இல் டேனிஷ் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில் காதலன் மத்தியாஸ் போ துபாய்க்கு அழைத்த போது, அவர் என்னை அங்கு விற்று விடுவார் என தோழிகள் பயமுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் வசிக்கும் தோழியின் அக்கா ஒருவருடைய செல்போன் எண்ணை கொடுத்து, தொடர்பு கொள்ள சொல்லியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதை இப்போது நினைத்தாலும் தனக்கு சிரிப்பு வருவதாகவும், அதன் பிறகு பல வருடங்கள் காதலித்து, இருவரும் கரம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்