தேர்தல் நேரத்தில் இமேஜை காலி செய்ய சதி…விஜய்யை வீழ்த்த போட்ட கணக்கு தவிடுபொடி…அன்று குற்றச்சாட்டு… இன்று ‘முதலாளி என்னை மன்னிச்சிருங்க’… விஜய் உதவியாளரின் அதிரடி யூ-டர்ன்…! – cinefeeds
Connect with us

CINEMA

தேர்தல் நேரத்தில் இமேஜை காலி செய்ய சதி…விஜய்யை வீழ்த்த போட்ட கணக்கு தவிடுபொடி…அன்று குற்றச்சாட்டு… இன்று ‘முதலாளி என்னை மன்னிச்சிருங்க’… விஜய் உதவியாளரின் அதிரடி யூ-டர்ன்…!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “விஜய்யிடம் பத்து வருடங்கள் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்தபோது, ஒருமுறை சாப்பாட்டில் முடி இருந்ததற்காக விஜய் என் நெஞ்சில் மிதித்துவிட்டார்” என அவர் கூறியிருந்தார். விஜய்யின் அரசியல் வருகையை எதிர்க்க நினைத்த அரசியல் எதிர்தரப்பினர், அதே காலகட்டத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியதாக எழுந்த வதந்திகளோடு சேர்த்து, இந்த உதவியாளரின் பேட்டியையும் தங்களுக்கு சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கடுமையாகப் பரப்பினர்.

இருப்பினும், இந்த விமர்சனங்களையும் தனிப்பட்ட இமேஜ் காலி செய்யும் முயற்சிகளையும் கடந்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்களுக்கு ‘விஜய் அண்ணா தரமான பதிலடி கொடுத்துவிட்டார்’ என அவரது தொண்டர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்களைப் பகிர்ந்து பதிவிட்டு வந்தனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் விஜய் அடைந்த இந்த அசுர வளர்ச்சி, எதிர்த்தரப்பினரின் கணக்குகளை முற்றிலும் தலைகீழாக மாற்றியது.

Advertisement

இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக அந்த முன்னாள் உதவியாளர் சமீபத்தில் அளித்த மற்றொரு பேட்டியில் தனது முந்தைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, விஜய்யிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். “என்னை மன்னிச்சுடுங்க முதலாளி; தற்போது வாழ்வாதாரம் இன்றி கடும் குடும்பக் கஷ்டத்தில் தவித்து வருகிறேன், எனக்கு அவர்தான் உதவ வேண்டும்” என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். விளம்பரத்திற்காக இதைப்பேசவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாக இந்த மன்னிப்பு முதலமைச்சர் விஜய்யைச் சென்றடைந்து, அவர் தன்னை மீண்டும் அழைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில் காத்திருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in