CINEMA
தந்தையை தொடர்ந்து தாயையும் இழந்த அஜித்…பெற்றோரை இழந்த சோகம்…நிலைகுலைந்த ‘ஃபீனிக்ஸ் பறவை’…மீளா துயரத்தில் AK குடும்பம்… உருகும் ரசிகர்கள்…!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் தாய் மோகினி (85), இன்று வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைந்த நிலையில், தற்போது தாயையும் இழந்து தவிக்கும் அஜித் குடும்பத்தினருக்கு இத்துயரச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த மோகினியின் இறுதிச்சடங்குகள் பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் சூழலில், திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எந்தவொரு சினிமா பின்னணியும் இன்றி, கடுமையான உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் மட்டுமே திரையுலகில் ஃபீனிக்ஸ் பறவையாக உயர்ந்தவர் அஜித். அவரது இந்த வளர்ச்சிக்கும் துணிச்சலுக்கும் ஆரம்பக் காலம் தொட்டே முழு ஆதரவாக இருந்தவர்கள் அவரது பெற்றோரே ஆவர். பெற்றோர் மீது அளவற்ற பாசம் கொண்ட அஜித், திருமணத்திற்குப் பிறகும் தந்தை, தாய், மனைவி ஷாலினியின் பெற்றோர் மற்றும் சகோதரர் என அனைவரையும் ஒரே வீட்டில் வெவ்வேறு தளங்களில் தங்கவைத்து, ஒரு கூட்டுக்குடும்பமாகவே அரவணைத்து வாழ்ந்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது தாயை அஜித்குமார் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை அஜித்தின் தந்தை மறைந்தபோது, அஜித்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறிச் சென்றார். தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது நண்பரின் தாயார் மறைவுக்கு அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், தந்தை மறைவின்போது அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது போல, தற்போதும் அறிக்கை எதுவும் வெளியாகுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
